11th September 2024 19:58:08 Hours
கமாண்டே படையணி 07 செப்டம்பர் 2024 அன்று க.பொ.த உயர்தரப் பரீட்சை - 2023 இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகளை கௌரவிக்கும் வகையில் பரிசளிப்பு விழாவை நடத்தியது. கமாண்டே படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதலாம் படை தளபதியும் கமாண்டே படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.