10th September 2024 08:27:17 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புலமைப்பரிசில் மற்றும் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி 03 செப்டம்பர் 2024 அன்று கரந்தெனிய இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் போது, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி 21 இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய எழுதுபொருட்களை வழங்கினார்.
இந் நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.