10th September 2024 08:00:05 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 31 ஆகஸ்ட் 2024 அன்று பாங்கொல்ல ‘அபிமன்சல III’ ஆரோக்கிய ஓய்வு விடுதிக்கு, புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு பெறும் போர் வீரர்களின் நலன் விசாரிக்கச் சென்றனர்.
விஜயத்தின் போது இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி உறுப்பினர்களுடன் சேர்ந்து, அங்கு வசிக்கும் போர் வீரர்களுக்கு ஆடைகளை வழங்கினார். யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் உற்சாகமூட்டும் உரையை நிகழ்த்தியதுடன், மேலும் போர் வீரர்களுக்கான தேநீர் அமர்வுடன் நிகழ்வு நிறைவுற்றது.
சிரேஷ்ட அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்தில் பங்குப்பற்றினர்.