Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th September 2024 11:12:58 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சிறுவர் தின நிகழ்வு

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில் "ஜூனியர் ஹைலேண்டர்ஸ் சிறுவர் தினம்" 01 செப்டம்பர் 2024 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுடன் வேடிக்கை விளையாட்டுகளும் இடம்பெற்றன. கலந்து கொண்டவர்களுக்கு சுவையான மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.