04th September 2024 16:23:47 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கம்புருபிட்டிய அபிமன்சல 2 க்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
அங்கு நிரந்தரமாக காயமடைந்து புனர்வாழ்வளிக்கப்படும் போர் வீரர்களின் நலம் விசாரித்ததுடன், போர் வீரர்களினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு போர் வீரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதியை தலைவி வழங்கினார். இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினர் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
விஜயத்தின் நிறைவாக, தலைவி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.