31st August 2024 18:18:52 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கம்புருபிட்டியவில் உள்ள 'அபிமன்சல-II' க்கு அங்கு வசிக்கும் போர் வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் 28 ஆகஸ்ட் 2024 அன்று விஜயம் செய்தார்.
இந்நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரக்கோன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த விஜயத்தின் போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், உடவலவ - கள பட்டறையினால் வழங்கப்பட்ட போர் வீரர்களுக்கான பத்திக் சட்டைகள், சாரங்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
இந் நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் போர் வீரர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கினர். இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.