29th August 2024 17:57:36 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி. துலாஷி மீபாகல அவர்கள் 26 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் பதவி ஏற்றார்.
மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் திருமதி. துலாஷி மீபாகல அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு புதிய தலைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.