27th August 2024 07:19:29 Hours
திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்கள் 22 ஆகஸ்ட் 2024 அன்று பனாகொட பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களை பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் துணைத் தலைவி திருமதி அருணி சந்திரசேகர அவர்கள் வரவேற்றார். மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றார்.
திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்கள் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுக்கு உரையாற்றியதுடன், தனது பாராட்டுக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். அதிகாரிகள் உணவகத்தில் தேநீர் விருந்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன.