23rd August 2024 17:40:57 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 40வது வருடாந்த பொதுக் கூட்டம் 21 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவுகளின் தலைவிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் பாடலுடன் ஆரம்பமான கூட்டத்தில் உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சேவை அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய தலைவி, கூட்டத்தில் உரையாற்றினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் நந்தனி சமரகோன் முன்னைய கூட்டத்தின் அறிக்கைகளை சமர்ப்பித்தார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீ.குமாரி வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு அறிக்கைகள் மற்றும் செலவு விவரங்களை சமர்பித்தார். பின்னர் லெப்டினன் என்.டபிள்யூ.டபிள்யூ.வி.எஸ் காவிந்தியா, திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நலன்புரி செயற்பாடுகள் தொடர்பான திட்ட அறிக்கையை சமர்பித்தார்.
பின்னர், 12 வது கெமுனு ஹேவா படையணியின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் ஊனமுற்ற பிள்ளைக்கும் இலங்கை சிங்க படையணியின் இராணுவ வீரரின் தாயாருக்கும் சக்கர நாற்காலிகள் சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், இலங்கை சமிக்ஞை படையணியின் சிரேஷ்ட அதிகாரவனையற்ற அதிகாரியின் மனைவிக்கு தலைவியினால் ஜூகி தையல் இயந்திரம் வழங்கி அவரது சுயதொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட்டது.
மேலும், இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்கள் இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவினால் பராமரிக்கப்படும் யோகட் திட்டத்திலிருந்து ஈட்டப்பட்ட ரூபா 200,000.00 தொகையினை இராணுவ சேவை வனிதையர் பிரிவிற்கு வழங்கினார்.
தலைவி மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் சிற்றுண்டி பகிர்வு மற்றும் சிநேகபூர்வ கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவுற்றது.