Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st August 2024 18:15:49 Hours

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம்

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் 2024 ஆகஸ்ட் 18 அன்று படையணி தலைமையகத்தில் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நெலுகா நாணயக்கார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

குருநாகல் பொது வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் அசங்க சேரசிங்கவினால் “மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்கள்” என்ற தலைப்பிலும் இலங்கை சிங்க படையணி தொண்டர் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் ஐ. சமரநாயக்க அவர்களினால் “சமூக ஒழுக்கங்கள் மற்றும் உணவக ஒழுக்கங்கள்” என்ற தலைப்பிலும் பயனுள்ள விரிவுரைகள் நடாத்தப்பட்டன. இந் நிகழ்வின் போது இரண்டு இராணுவ வீரர்களுக்கு அவர்களின் பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளை நிர்மாணித்து முடிப்பதற்கான நன்கொடையாக ரூ. 200,000 வழங்கப்பட்டதுடன் புற்றுநோயுடன் போராடும் இராணுவ வீரரின் மனைவிக்கு ரூ. 100,000 வழங்கப்பட்டது.

மேலும், லைசியம் சர்வதேச பாடசாலையின் திருமதி ஹர்ஷனி பெரேரா தலைமையில் இலங்கை சிங்க படையணியின் ஓய்வுபெற்ற போர்வீரர் ஒருவரின் மகள் எழுதிய சிறுகதையின் 350 பிரதிகள் வெளியிடப்பட்டதுடன் அப்பிள்ளைக்கு நன்கொடையும் வழங்கப்பட்டது. இந்த திட்டமானது சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உதவி பொருளாளர் திருமதி நெத்மினி முத்துமால அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய முக்கிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் பரிசுகள் வழங்கலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதியும் இலங்கை சிங்க படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்களின் துணைவியர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.