16th August 2024 12:46:45 Hours
இலங்கை மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி லிலந்தி தொலகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கடுவளை வில்பர்ட் பெரேரா நினைவு முதியோர் இல்லத்திற்கு 2024 ஆகஸ்ட் 10 அன்று விஜயத்தை மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் வளாகத்தைச் சுத்தப்படுத்தி, முதியோர்களுக்கு தேவையான சுகாதாரப் பொருட்களையும் வழங்கினர். பின்னர் முதியோர்களுக்கு சத்தான மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலங்கை மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் உப தலைவி வைத்தியர் திருமதி நாமலி திலகரத்ன மற்றும் பல அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.