16th August 2024 12:54:25 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுகூட்டம் 2024 ஆகஸ்ட் 10 அன்று படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
செயலாளர் கலந்து கொண்டவர்களை வரவேற்றுடதுடன் முந்தைய கூட்டத்தின் அறிக்கையினை வாசித்தார்.
தொடர்ந்து வரவுசெலவு அறிக்கை முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த வருடத்தின் நலன்புரி செயற்பாடுகள் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ நடனப் குழுவினர் பொறுப்பதிகாரியும், கதக் நடனத்தில் நிபுணருமான மேஜர் வெரோனிகா தசநாயக்க, நிகழ்விற்குக் கண்கவர் நடனம் ஒன்றை நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
பின்னர், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினரும், 2023 ஆம் ஆண்டில் சிறந்த பன்முகத்தன்மை சாம்பியன் பட்டத்தை வென்றவருமான திருமதி ருக்மணி ரத்நாயக்க, பார்வையாளர்களுக்கு எழுச்சியூட்டும் சொற்பொழிவுகளை வழங்கினார்.
அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.