Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th August 2024 12:55:53 Hours

இலங்கைஇலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் நன்கொடை திட்டம்

உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிக்காட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் மேற்பார்வையில் நன்கொடை நிகழ்ச்சி 10 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அனைத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையலகுகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதுடன், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 200,000.00 நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள்,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.