Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th August 2024 12:14:08 Hours

இப்பலோகம 'விருகெகுலு' சிறார்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தல்

இப்பலோகம ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் உள்ள சிறார்கள், 29 ஜூலை 2024 அன்று விருகெகுலு’ விளையாட்டு மைதானத்தில், ‘கட்டுல் பக்’ என்ற தொனிப்பொருளில் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் விருகெகுலு பாலர் பாடசாலையின் சிரேஷ்ட உறுப்பினர்களின் ஒரு பொறுப்பதிகாரியான திருமதி. அனோஜா பீரிஸ் அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சில உறுப்பினர்களுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பிரதம விருந்தினரை, சிறார்கள் தாம்பூலம் கொடுத்து வரவேற்றனர்.

இதன் போது அனைத்து பிள்ளைகளும் தேன் சேகரிப்பு, ஹாக்கி வேடிக்கை, ஈசல் விளையாட்டு, தேனீ விளையாட்டு, புல் துள்ளல் போன்ற அம்சங்கள் உட்பட பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டியின் போது சிறார்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய நிகழ்வு, வினோத, அணிநடை மற்றும் இசைக்குழு காட்சிகளால் மேலும் வண்ணம் சேர்த்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பிரதம விருந்தினர் பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகள்,இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், , சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.