04th August 2024 13:13:09 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் மின்னேரிய உள்ள ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையின் சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, 30 ஜூலை 2024 அன்று மின்னேரியாவில் உள்ள இலங்கை பீரங்கி முகாமில் உள்ள ஜெனரல் லயனல் பலகல்ல மைதானத்தில் ‘நிறத்தின் நிழல்’ என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரும் விருகெகுலு பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரியான திருமதி நிர்மலி விஜேகோன் அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சில உறுப்பினர்கள் மற்றும் சிறார்களுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். வருகை தந்த அவரை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து சிறார்கள் அன்புடன் வரவேற்றனர்.
இசைக்குழுக் காட்சிகள், அணிநடை காட்சிகள், வேகமான தச்சர், கடல்கன்னியின் பரிசு, அறிச்சுவடி நண்பர்கள், சிறந்த சமையல்காரர், படகுப் போட்டி, விவசாயி விளையாட்டு, பசியுள்ள டிஃபி, கராத்தே கண்காட்சி, நடனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதுடன் அந்த சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் சிறப்பு விளையாட்டுகள் மற்றும் வேடிக்கையான நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இறுதியில், பிரதம விருந்தினர் தேநீர் விருந்துபசாரத்தில் பெற்றோர்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்னதாக சிறார்களுக்கு பரிசுகளை வழங்கினார். கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.