06th August 2024 19:05:08 Hours
இராணுவ சேவை வனிதையரால் நிர்வகிக்கப்படும் தியத்தலாவை 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2024 ஆகஸ்ட் 02 அன்று 'விரு கெகுலு' விளையாட்டு மைதானத்தில் 'மிக்கி மவுஸ்' என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.து
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் விரு கெகுல பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரிகளின் ஒருவருமான திருமதி ஸூவேந்தரினி ரொட்ரிகோ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது வளாகத்திற்குல் சிறுவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
இசைக்குழு கண்காட்சிகள், அணி நடை கண்காட்சிகள் , சமநிலை விளையாட்டு , கேக் கேன், உரு விளையாட்டு, சீஸ் விளையாட்டு, மவுஸ் விளையாட்டு போன்ற பல்வேறு காட்சிகள் மற்றும் விளையாட்டுகளின் சிறார்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இறுதியில், பிரதம அதிதி சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் உரையாடி சிற்றுண்டிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் சிறார்களுக்கு பரிசுகளை வழங்கினார். அவர்கள் புறப்படுவதற்கு முன், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.