22nd May 2024 14:08:13 Hours
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 2024 மே 17 அன்று மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையத்தில் நடைபெற்றது.
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரக்கோன் அவர்கள் இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி, எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். மேலும், எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நலத்திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இந்தத் திட்டங்களுக்கு நிதியைப் பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.