27th July 2024 18:15:36 Hours
75வது இராணுவ தினத்தை ஒட்டி, இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை 25 ஜூலை 2024 அன்று 4 வது கள இலங்கை பீரங்கி படையணியில் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவெந்த்ரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இரத்த தானம் செய்தனர். நாரஹேன்பிட்டி, தேசிய இரத்த மாற்று சேவையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கினர்.
இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பீ.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.