13th August 2024 14:26:04 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமங்கிகா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2024 ஆகஸ்ட் 06 அன்று ராகம ரணவிரு செவனவிற்கு விஜயம் செய்தனர். .
இந்த விஜயத்தின் போது, தலைவி, உறுப்பினர்களுடன் சேர்ந்து, அங்கு வசிக்கும் போர் வீரர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கி, அவர்களின் நலம் மற்றும் அவர்களின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.
மேலும், தலைவி ரூபா 50000.00 பெறுமதியான துப்புரவு பொருட்கள் மற்றும் உபகரணங்களை புனர்வாழ்வு மையத்திற்கு வழங்கினார்.