13th August 2024 14:23:20 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரின் ஐந்தாவது வருடாந்த பொதுக் கூட்டம் 10 ஆகஸ்ட் 2024 அன்று கரந்தெனிய படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இக் கூட்டத்தில் 28 உறுப்பினர்கள் மற்றும் 9 பெண் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ் அமைப்பின் மூலம் புதிய குழு தெரிவு செய்யப்பட்டதுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 125 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2 (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி மூலம் தேவையுடைய ஒரு இராணுவ வீரருக்கு ஒரு வீட்டை கட்டி முடிக்க ரூ. 300,000 நன்கொடையாக வழங்கப்பட்டது.