12th August 2024 13:53:39 Hours
கஜபா படையணி சேவை வனிதையரின் வருடாந்த பொதுக்கூட்டம் 07 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கஜபா படையணி சேவை வனிதையரின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கஜபா படையணி வீரர்களின் குடும்பங்களின் நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்களை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும், இந்தக் குடும்பங்களுக்கு மேலும் ஆதரவளிப்பதற்கான எதிர்கால முன்முயற்சிகளைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு வழங்கியது.
கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.