Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th August 2024 20:50:00 Hours

இலங்கை பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரினால் புலமைப்பரிசில் வழங்கல்

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் தலைவி திருமதி உதிதா பெரேராவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 08 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளில் சிறந்து விளங்கிய 34 சிறந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும், 118 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய உதவி பொதிகள் வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்கள் அடங்கிய மேலும் 20 பரிசுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டன.

இலங்கை பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றல் இந்த நலன்புரி முயற்சிக்கு வலுவான ஆதரவை பிரதிபலிக்கிறது.