Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th August 2024 13:58:13 Hours

இலங்கை இராணுவ சேவை படையணிசேவை வனிதையர் பிரிவினால் நன்கொடை வழங்கல்

இலங்கை இராணுவ சேவை படையணிசேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்திராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது இலங்கை இராணுவ சேவை படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈஆர்எஸ் டி சில்வா அவர்களுடன் இலங்கை இராணுவ சேவை படையணிசேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர் திருமதி இனோஷி பெர்னாண்டோ இணைந்து 3 ஆகஸ்ட் 2024 அன்று திசாவெவ இராணுவ சேவை படையணி பாடசாலையில் நன்கொடை வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது, 5 வது இலங்கை இராணுவ சேவை படையணி படையினரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் 5 வது இலங்கை இராணுவ சேவை படையணியில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இரசாயன நோயியல் தொடர்பான ஆலோசகர் மேஜர் (டாக்டர்) ஷானிகா ஹலங்கொட, 'ஊட்டச்சத்து மற்றும் குழந்தைப் பருவ வளர்ச்சி' என்ற தலைப்பில் விரிவுரையை நடத்தினார்.

பின்னர் அனைத்து பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வின் முடிவில், இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி 3 வது இலங்கை இராணுவ சேவை படையணியினால் பராமரிக்கப்படும் தயிர் திட்டத்தை பார்வையிட்டார்.