Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

08th August 2024 14:25:49 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் ராகம ரணவிரு செவனவிக்கு விஜயம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தலாவல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியுடன் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு இணைந்து ராகம ரணவிரு செவனவில் 2024 ஜூலை 16 அன்று நன்கொடை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் மன உறுதியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இந்நிகழ்வின் போது, அங்கு வசிக்கும் போர் வீரர்களுக்கு அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள் வீரர்களுக்கு சுவையான மதிய உணவை வழங்கியதுடன் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கலிப்சோ இசைக்குழுவின் இசையுடன் அவர்களை மகிழ்வித்தனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.