07th August 2024 13:47:08 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுகூட்டம் 2024 ஜூலை 28 அன்று 11 வது காலாட் படைப்பிரிவில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
செயலாளர் கலந்து கொண்டவர்களை வரவேற்றுடதுடன் முந்தைய கூட்டத்தின் சுருக்கத்தினை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து வரவுசெலவு அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டி பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பால் பாக்கெட்டுகளை நன்கொடையாக வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் உட்பட வருடத்தின் நலன்புரி செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது குழு படம் எடுத்தலுடன் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது. இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.