06th August 2024 18:53:33 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் யாழ்,வன்னி,கிழக்கு,மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையகங்களில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ மற்றும் சிவில் உறுப்பினர்களுக்கு 05 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவத் தலைமையக இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் 500 உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த நிவாரணப் பொதிகளை பெறுனர்களுக்கு வழங்கி வைத்தார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.