05th August 2024 10:59:31 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுரங்கி அமரபால அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 30 ஜூலை 2024 அன்று இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் 1 வது களப் பொறியியல் படையணியின் ஆதரவுடன் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் உள்ள சிப்பாய்களின் பிள்ளைகளின் அத்தியாவசிய கற்றல் உபகரண உதவிகளை வழங்குவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு பரிசுப் பொதியிலும் புத்தகங்கள், எழுதுபொருட்கள், பாடசாலை பைகள் போன்ற பல்வேறு பொருட்கள் அடங்கியிருந்தன.
இந் நிகழ்வில் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.