Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd August 2024 21:37:52 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரின் வருடாந்த பொதுக்கூட்டம்

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 26 ஜூலை 2024 அன்று நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக சேவை வனிதையர் கீதம் பாடப்பட்டதனை தொடர்ந்து இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் ஆரம்ப உரையாற்றப்பட்டது. இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் மேஜர் எஸ்வீஆர்ஏ டி சில்வா அவர்களினால் இராணுவ மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதை மையமாகக் கொண்டு ‘உணர்ச்சிகள்மற்றும்உணர்வுகளைகட்டுப்படுத்தும் திறனை எவ்வாறு மேம்படுத்துவது’ என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

இக்கூட்டத்தில் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நடத்தப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்டுள்ள நலன்புரி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பின்னர், இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை விளக்கும் சிறு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, சிவில் பணியாளர்கள் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சிப்பாய்களுக்குமூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன.