31st July 2024 19:45:14 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஜூலை 21 ஆம் திகதி அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினரான திருமதி ஒஷங்கா ரத்நாயக்கவின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 18 முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
முதியோர் இல்லத்திற்கு இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினால் வழங்கும் மாதாந்த ஆதரவின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.