Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

30th July 2024 17:26:59 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரினால் செயற்கை கால்கள் விநியோகம்

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரினால் செயற்கை கால்கள் தானமாக வழங்கும் நிகழ்வு 28 ஜூலை 2024 அன்று வெலிகந்த கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க தலைமையிலான இந்த முயற்சிக்கு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 காலாட் படைப்பிரிவு மற்றும் 7வது கெமுனு ஹேவா படையணி ஆதரவு வழங்கியது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதியத்தலாவ, வெலிகந்த, சிங்கபுர, புனானி மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் வசிக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட ஐந்து முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினர்கள் உட்பட 26 மாற்றுத்திறனாளிகள் இந்நிகழ்வில் பயனடைந்தனர்.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு நற்புறவு சங்கத்தின் நிதியுதவியுடன், கெபிடல் சிட்டி ரொட்டரிக் கழக தவிசாளர் திரு. ஹெமந்த அபோன்சு, கலாநிதி சஞ்சீவ் ராஜபக்ஷ, மற்றும் திரு. எஸ்எம்எஸ் பண்டார 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.