30th July 2024 17:29:03 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 27 ஜூலை 2024 அன்று மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு (தேசிய புற்றுநோய் நிறுவனம்) விஜயம் செய்தனர்.
இந் நிகழ்வில் ரூபா 500,000.00 மதிப்புள்ள அவசரத் மருந்துக்கள் மற்றும் பரிசுப்பொதிகள் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களால் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் மருத்துமைனையின் முக்கிய தேவைகளுக்கு தமது ஆதரவினை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் வழங்கினர்,