Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th July 2024 21:51:11 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் 'மனுசத் தெரண - 72' உடன் இணைந்து நலன்புரி திட்டங்களை முன்னெடுப்பு

‘டிவி தெரண வின் மனுசத் தெரண தனது 72வது வேலைத்திட்டத்தை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உதவியுடன் 27 ஜூலை 2024 அன்று கலேவல சில்வத்கல மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்தது.

‘அதன்படி, சிவில் சமூக அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு பல சமூக நிகழ்ச்சிகள் பிரதேச மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

‘இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

‘பாரம்பரிய மங்கல விளக்கேற்றி, உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தல் மற்றும் இராணுவ சேவை வனிதையர் கீதம் ஆகியவற்றுடன் முக்கிய நலன்புரி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

‘சில்வத்கல மகா வித்தியாலய மாணவர்களின் அழகிய நடன நிகழ்ச்சி நிகழ்வுக்கு மேலும் வண்ணம் சேர்த்தது.

‘மனுசத் தெரண' நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, மொரகொல்ல மகா வித்தியாலயம் மற்றும் சில்வத்கல மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இரண்டு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதேவேளை, அக்குவா லைப் நீர் நிறுவனம் கொம்பாவ மகா வித்தியாலயத்திற்கு நீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.

‘இராண்டாம் கட்ட நிகழ்வின் போது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்கள் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களுடன் இணைந்து, பிரதேசத்தில் 08 பக்க பிரதேச பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகளை அன்பளிப்பாக வழங்கினார். இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் காலணிகளுக்கான நன்கொடையை வழங்கினர்.

‘அதனைத் தொடர்ந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் 20 இலவச மூக்கு கண்ணாடிகளையும் 20 உலர் உணவுப் பொதிகளையும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கினார். இந்த நன்கொடைக்கு இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி உதவியளித்திருந்தது.

‘அதனைத் தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 400 குடும்பங்களுக்கு 400 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

‘மேலும் இராணுவ தளபதி ரூ. 300,000.00. மதிப்புள்ள இசைக்கருவிகளை சில்வத்கல மகா வித்தியாலயத்திற்கு வழங்கினார்.

‘அன்றைய நிகழ்ச்சி நிரலில் இறுதியில் தெரண லிட்டில் ஸ்டார் சாம்பியன்கள் பார்வையாளர்களை மகிழ்வித்துடன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி “அதிரித்ம” இசைக்குழுவின் இசையால் நிகழ்வு வண்ணமயமாக்கப்பட்டது.

‘பின்னர் சில்வத்கல மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இசை கூடத்தினை இராணுவ தளபதியும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் மாணவர்களிடம் கையளித்தனர். 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர், கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் அவர்களின் மனிதவளம் மற்றும் நிதி உதவியை இத் திட்டத்திற்கு வழங்கினர்.

‘இந் நிகழ்வின் இறுதிக்கு முன்னர் இராணுவத் தளபதி சில்வத்கல பாடசாலையின் அதிபருடன் இணைந்து பாடசாலை வளாகத்தைப் பார்வையிட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதேச மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், டீவி தெரண மற்றும் மனுசத் தெரண உறுப்பினர்கள், மருத்துவக் குழுவின் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.