27th July 2024 18:18:38 Hours
இராணுவ சேவை வனிதையரினால் நிர்வகிக்கப்படும் பல்லேகலவிலுள்ள 'விருகெகுலு' பாலர் பாடசாலையில் , 'ஹலோ சம்மர்' எனும் தொனிப்பொருளின் கீழ் தனது வருடாந்த விளையாட்டுப் போட்டியை 26 ஜூலை 2024 அன்று பல்லேகலையில் உள்ள 'விருகெகுலு' விளையாட்டு மைதானத்தில் அன்றை நிகழ்வின் பிரதம அதிதியான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் பங்கேற்புடன் நடாத்தியது.
திருமதி ஜானகி லியனகே அவர்கள் இந் நிகழ்விற்கு பார்வையிடுவதற்காக வளாகத்திற்கு வருகை தந்த போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சிறார்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
இந் நிகழ்வில் சிறார்கள் சிறிய கடற்கொள்ளையர்கள், கேக் தயாரித்தல், பந்துகள் சேகரிப்பது, பெரிய கால், சமநிலை விளையாட்டு, கட்டிட விளையாட்டு, பந்துவீச்சு விளையாட்டு மற்றும் ஹங்கிரி ஆக்டோபஸ் போன்ற பல்வேறு காட்சிகள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தயதுடன் மேலும் அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் சிறப்பு விளையாட்டுகள் மற்றும் வேடிக்கைகளில் பங்கேற்றனர்.
இறுதியில், பிரதம விருந்தினர் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் உரையாடி சிற்றுண்டிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் சிறார்களுக்கு பரிசுகளை வழங்கினார். தலைவியர் புறப்படுவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.
இலங்கை புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு விருகெகுலு பாலர் பாடசாலை பெறுப்பதிகாரியுமான திருமதி பிரசாதினி ரணசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.