Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

27th July 2024 09:42:03 Hours

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் அபிமன்சல – II போர் வீரர்களை சந்திப்பு

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷார யட்டிவாவல அலுவிஹாரே அவர்கள் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களுடன் 20 ஜூலை 2024 அன்று கம்புருபிட்டியவில் உள்ள 'அபிமன்சல-II' க்கு விஜயம் செய்தார்.

தனது விஜயத்தின் போது, தலைவி அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் சுமுகமாக உரையாடினார். கலந்துரையாடலின் போது, 13 போர் வீரர்களுக்கு அத்தியாவசிய பரிசுப் பொதிகளையும் அவர்களின் உதவியாளர்களுக்கு பரிசுகளையும் தலைவி வழங்கினார். பராமரிப்பிற்கு ஆதரவாக, தலைவி அபிமன்சாலா-II இன் பராமரிப்புக்காக சுகாதார பொருட்களையும் வழங்கினார்.

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் போர் வீரர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கி அவர்களை இசையால் மகிழ்வித்தனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.