26th July 2024 09:34:15 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 18 ஜூலை 2024 அன்று கரந்தெனியவில் உள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் ஒரு நிகழ்ச்சித் தொடர் நடைபெற்றது. இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இராணுவ புலனாய்வு படையணி தலைமையகம் ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் ஒரு சிறப்பம்சமாகும். மேலும், "என் கண்கள் மூலம் சிங்களப் புத்தாண்டு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சித்திர கண்காட்சியில் சிறந்து விளங்கிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஒன்பது பிள்ளைகளுக்கு திருமதி ஜானகி லியனகே அவர்கள் சாதனைகளைக்காக அவர்களின் திறமைகளை ஊக்குவித்து விருதுகளை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்வின் போது இராணுவ புலனாய்வு படையணி படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 25 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான திருமதி குமுது கருணாரத்ன அவர்கள் ஆற்றிய "புரிதல், திருப்தி மற்றும் எங்கள் வாழ்க்கை" என்ற தலைப்பிலான முக்கிய உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பிள்ளைகள் கலந்துகொண்டனர்.