Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th July 2024 20:49:07 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு பனாகொட ‘விருகெகுலு’ விளையாட்டுப் போட்டியில் வரவேற்பு

பனாகொட 'விருகெகுலு' பாலர் பாடசாலை பிள்ளைகளின் வருடாந்த விளையாட்டு போட்டி “சமூக உதவியாளர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் 24 ஜூலை 2024 அன்று இலங்கை சமிஞ்சை படையணி மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பல இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். இதன்போது பிரதம விருந்தினரை பிள்ளைகள் தாம்புலம் வழங்கி வரவேற்றனர்.

இந் நிகழ்வின் போது அனைத்து சிறுவர்களும் (like doctor game) மருத்துவர் விளையாட்டு, (fire fighter) தீயணைப்பு வீரர், (dairy farm) பால் பண்ணை, (postman game) தபால்காரர் விளையாட்டு, (mechanic game) இயந்திர விளையாட்டு,(fishing game) மீன்பிடி விளையாட்டு, (bakers game and happy painter )பேக்கர்ஸ் விளையாட்டு மற்றும் மகிழ்ச்சியான ஓவியர் போன்ற அம்சங்கள் உட்பட பல்வேறு விளையாட்டு செயற்பாடுகளில் பங்கேற்றனர்.

விளையாட்டுப் போட்டியின் போது பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய நிகழ்வு அணிநடை கண்காட்சி, இசைக்குழு கண்காட்சியுடன் நிகழ்வுக்கு வண்ணம் சேர்த்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பிரதம அதிதி பரிசில்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யகம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை கவசப் வாகன படையணி சேவை வனிதையர் பிரவின் தலைவியும் சிரேஷ்ட உறுப்பினருமான திருமதி சமங்க பெர்னாண்டோ மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.