Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd July 2024 18:32:51 Hours

காலி 'விரு கெகுலு' சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

காலி 'விரு கெகுலு' பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 22 ஜூலை 2024 அன்று காலி 2 (தொ) கெமுனு ஹேவா படையணி முகாம் மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன் போது வளாகத்திற்கு வருகை தந்த அவர் சிறார்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பாலர் பாடசாலையின் அனைத்து சிறுவர்களும் பேண்ட் கண்காட்சி, சிறந்த வீரர் விளையாட்டு, தேனீவிளையாட்டு, கொமாண்டோ விளையாட்டு, விநோத உடை நிகழ்ச்சி, சிரிக்கும் போட்டி, வட்டப் போட்டி , பந்து சேர்க்கும் விளையாட்டு, பந்துவீச்சு விளையாட்டு, சமநிலை விளையாட்டு மற்றும் குரங்கு தொப்பி விளையாட்டு போன்ற பல்வேறு வேடிக்கை விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.

விளையாட்டுப் போட்டியின் போது சிறார்களின் பெற்றோருக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

61 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ, காலி 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி. துஷார கருணாரத்ன, இராணுவ சேவை வனிதையர் பிரிவு பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என்.மகாவிதான, இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலக அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.