23rd July 2024 15:52:07 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் அடிப்படை போர்கருவி களஞ்சியசாலையுடன் இணைந்து, 2024 ஜூலை 17 அன்று ராகம ஏசிசிசி சிறுவர்கள் அபிவிருத்தி நிலையத்தில் நன்கொடை நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வழங்கல் கட்டளைத் தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீஎல்எஸ்சீ ஏஏடீஓ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு இடம் பெற்றது. நிகழ்வின் போது, போர்கருவி படையணியின் கலாசார நடனக் குழு மற்றும் கலிப்சோ குழுவினரின் வினோத விளையாட்டுகள், நடனம், பாடல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, இதன் போது சிறுவர்களுக்கு சத்தான மதிய உணவும் வழங்கப்பட்டது.
மேலும், சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு அறைக்கும் கருவி சுவர் மின்விசிறிகள், கூரை மின்விசிறிகள் மற்றும் பொழுதுபோக்கு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.