23rd July 2024 05:53:32 Hours
இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினால் நடாத்தப்பட்ட பாடசாலை உதவி பொருட்கள் மற்றும் புத்தக விநியோக நிகழ்ச்சி 19 ஜூலை 2024 அன்று இடம்பெற்றது.
இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்கே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த 300 பிள்ளைகளுக்க வருடத்திற்கு தேவையான அத்தியாவசியப் பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு ரோட்டரி கிளப் ஆப் கேபிடல் சிட்டி மற்றும் ரீஜண்ட் டீஸ் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி எஸ். ராஜபக்ஷ, திரு. ஜாலிய போடின்னாகொட, திரு. வி. பெரேரா மற்றும் திரு. எச். டி சில்வா ஆகியோரால் அனுசரணை வழங்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.