20th July 2024 22:22:52 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கடுவலை வில்பர்ட் பெரேரா முதியோர் இல்லத்தில் வசிக்கும் 26 முதியவர்களுக்கான சமூக நலத்திட்ட நிகழ்ச்சி 2024 ஜூலை 14 அன்று நடாத்தப்பட்டது.
இத்திட்டத்தின் போது, கொமாண்டோ படையணி படையினர், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து முதியோர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் முடி வெட்டுதல், குளிப்பாட்டுதல் மற்றும் அவர்கள் வசிக்கும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்தல் போன்ற திட்டங்களை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சமய அனுஷ்டானமும் அங்கு வாழ்பவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டன. மேலும் பரிசுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய துப்புரவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
முதலாம் படைத் தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.