20th July 2024 17:49:32 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியான திருமதி லிலாந்தி தொலகே அவர்கள் 18 ஜூலை 2024 அன்று இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.
மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, திருமதி தொலகே அவர்கள் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் புதிய தலைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.