Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th July 2024 19:10:44 Hours

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்கள் 15 ஜூலை 2024 அன்று இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் சமய அனுஷ்டானங்களை தொடர்ந்து பதவியேற்றார்.

வருகை தந்த திருமதி துஷாரி அபேசிங்க அவர்களை இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி சத்து ராணி ஓவிடிகல, சேவை வனிதையர் பிரிவின் நிர்வாக குழு உறுப்பினர்களான திருமதி நயோமி டி சில்வா மற்றும் திருமதி அச்சினி மஹாகும்புர ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி அன்புடன் வரவேற்றனர்.

மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, திருமதி துஷாரி அபேசிங்க தனது புதிய நியமனத்தை குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பாரம்பரிய மங்கல விளக்கை ஏற்றினார். இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவிக்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பெண் அதிகாரிகள் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.