Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th July 2024 14:08:37 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் படையினர் மற்றும் குடும்பங்களுக்கு மரியாதை

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 ஜூலை 05 அன்று படையினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சிவில் ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் கெமுனு ஹேவா படையணி தலைமையக வளாகத்தில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதரவின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவு திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினர், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மூக்குண்ணாடிகள் உட்பட மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. திருமதி ஜானகி லியனகே அவர்கள் சிப்பாயின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு செயற்கை கால் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில், உயர்தரப் பரீட்சையில் சிறந்த சித்திகள் பெற்ற இராணுவக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந் நாளின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில், திருமதி ஜானகி லியனகே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிக்கும் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த வசதி ஆனது கெமுனு ஹேவா படையணி தலைமையக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.