Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th July 2024 14:05:14 Hours

இராணுவ சேவை வனிதையரின் 40 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வன்னியில் மரநடுகை

இராணுவ சேவை வனிதையரின் 40 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு 2024 ஜூலை 12 ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த திட்டமானது இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் கருத்திற்கமைய, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 56 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 1390 மரக்கன்றுகள் (நாக மரம், இழுப்பை, மஹோகனி, அகர் மரம்) நடும் திட்டம் 12 ஜூலை 2024 படைப்பிரிவின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டன. இத் திட்டம் ஆலங்குளம் வனப்பகுதியில் கைவிடப்பட்ட காணியில் முன்னெடுக்கப்பட்டது, இதில் மாணவர்கள், மல்லாவி தேசிய கல்லூரி மற்றும் தோரணங்கண்டல் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் வன பாதுகாப்பு அதிகாரிகள், அரச பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.