Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th July 2024 16:01:29 Hours

இராணுவ சேவை வனிதையரின் 40 வது ஆண்டு விழாவில் போர் வீரர்களுக்கு மரியாதை

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், "வீர மாதா உபர உலேல" என்ற கருப்பொருளில் 12 ஜூலை 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் ஒரு விழா நடைபெற்றது. தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த பரம வீர விபூஷண(பீடப்ளியூவீ) மற்றும் வீர விக்ரம விபூஷண(டப்ளியூடப்ளியூவீ) பதக்கங்களை பெற்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களைப் பாராட்டுவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் வரவேற்றதுடன் இராணுவ கலாசார நடனக் குழுவினால் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகி அதைத் தொடர்ந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவு பாடல் பாடப்பட்டது. பின்னர், உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பதக்கம் பெற்றவர்களின் வீரம் மற்றும் தியாகங்களை எடுத்துரைக்கும் ஒரு சிறிய வீடியோ ஆவணப்படம் காட்சி படுத்தப்பட்டது.

அவர்களின் இறுதி தியாகத்தை அங்கீகரித்து, தங்கள் சக வீரர்களின் உயிரைப் பாதுகாப்பதில் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்திய பீடப்ளியூவீ விருது பெற்ற போர்வீரர்களின் உறவினர்களுக்கு சிறப்பு விருதுகள், நிதி உதவி மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவ நடனக் குழுக்கள் மற்றும் இசைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பங்களிப்புகளை பாராட்டினர்.

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் விழா நிறைவு பெற்றது.தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்தில் விருந்தினர்கள் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் குழுபடம் மற்றும் மதிய உணவுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பீடப்ளியூவீ மற்றும் டப்ளியூடப்ளியூவீ பதக்கம் பெற்றவர்களின் உறவினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.