11th July 2024 18:53:43 Hours
இலங்கை பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதிதா பெரேராவின் தலைமையின் கீழ், 4 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு நிதி நன்கொடை நிகழ்ச்சியை வியாழக்கிழமை (27 ஜூன் 2024) முன்னெடுத்தது.
இந்த திட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கும், மருத்துவ உதவிகள் தேவைப்படும் இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வசதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்நிகழ்வின் ஊடாக 06 பேர் பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதிதா பெரேரா பிரதம அதிதியாகவும், அவருக்கு துணையாக 4 வது (தொ) இலங்கை பொறியியல் சேவை படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜி ஏ பந்துல அவர்களின் துணைவியார் திருமதி அனுஷா சந்திரரத்ன கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.