09th July 2024 05:57:21 Hours
உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிக்காட்டலில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜீரா பெரேரா அவர்களின் மேற்பார்வையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக விரிவுரை மண்டபத்தில் 2024 ஜூலை 06 அன்று நன்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் போது, 11 போர்வீரர்களுக்கு வீட்டு நிர்மாணிப்புத் திட்டத்திற்காக தலா ரூபா 200,000/- நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனந்தா கல்லூரி குழு 95 பழைய மாணவர் சங்கத்தினர், இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கியது. மேலும், இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து, இரண்டு இராணுவ வீரர்களின் இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு சக்கர நாற்காலி மற்றும் குளியலறை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குழு 95 இன் உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.