08th July 2024 21:33:14 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதரவின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 29 ஜூன் 2024 அன்று கம்புருப்பிட்டியவில் உள்ள ஆரோக்கிய நல விடுதியான 'அபிமன்சல-2'க்கு விஜயம் செய்தனர்.புனர்வாழ்வு பெறும் போர் வீரர்களின் நலன் மற்றும் நலன்புரிகளை விசாரிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
வருகையின் போது, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள்,போர் வீரர்களுக்கு தேநீர் வழங்கியதுடன், 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கலிப்சோ இசைக்குழுவின் இசையால் அவர்களை மகிழ்வித்தனர். திருமதி மனோரி வெலகெதர அவர்கள் தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், 10 மின்விளக்குகள் மற்றும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களை உள்ளடக்கிய பரிசுப் பொதிகளை ஆரோக்கிய நிலையத்திற்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.