04th July 2024 14:06:24 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஜூலை 01 ஆம் திகதி பல தொடர் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் அனுசரனையில் அலேகம மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 177 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விறுவிறுப்பான கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அலேகம மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தியத்தலாவவில் உள்ள 'விருகெகுலு' முன்பள்ளி மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி விஜயம் செய்தார். இவ்விஜயம் வருகை கல்வி மற்றும் நிர்வாக விடயங்களை மதிப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டதுடன் மாணவர்களுக்கான உயர் தரமான கவனிப்பு மற்றும் கற்றலை உறுதி செய்தது.
விஜயத்தின் நிறைவில் தியத்தலாவ கோல்ப் கழகத்தில் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் பணியாளர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி வழங்கினார்.
பின்னர், தியத்தலாவவில் உள்ள "சொப் ஓப் தி கேரிசன்" பல்நோக்கு விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்த தலைவி, எதிர்காலத் திட்டங்கள் குறித்த வழிகாட்டல்களை வழங்கியதுடன், வளாகத்தின் தொடர்ச்சியான வினைத்திறனை உறுதி செய்தார்.