02nd July 2024 14:26:49 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 28 ஜூன் 2024 அன்று படையணி தலைமையகத்தில் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 67 இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பயனடைந்தனர். இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.